திருச்சி மாவட்டம் துறையூரில் தமிழ்நாடு கால்நடை வளர்ப்பு பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சத்தியம் சரவணன் தலைமையில் துறையூர் காவல்துறையினர்க்கு பாராட்டு விழாவும் மற்றும் மகளிர் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கடந்த மாதம் 4 ம் தேதி ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த பொன்மலர் என்பவர் துறையூர் பகுதியில் ஆடுகளை மேய்த்து ஜீவனம் செய்து வந்துள்ளார். மர்ம நபர்கள் இரண்டு பேர் அவர் அணிந்திருந்த 11 சவரன் நகை திருடி சென்றனர். அதனை தொடர்ந்து துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பெயரில் விசாரணை செய்த காவல் துறையினர் 48 மணி நேரத்தில் குற்றவாளியை கண்டுபிடித்து நகையை மீட்டெடுத்தனர்.
காவல்துறையினரை கௌரவிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு நல சங்க மாநில பொது செயலாளர் வழக்கறிஞர் சத்தியம் சரவணன், கூறுகையில்….. சாதாரண மக்கள் என்று பார்க்காமல் புகார் அளித்த ஒரே நாளில் நகை திருடியவர்களை துரித நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளிடம் இருந்து நகையை மீட்டு அவர்களை கைது செய்த துறையூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார்,
உதவி ஆய்வாளர் ராஜேஷ் குமார், குற்றப்பிரிவு அதிகாரி கலைச்செல்வன் உள்ளிட்ட தனிப்படையினருக்கு பாராட்டை தெரிவித்துக்கொள்கிறோம். இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் கணேசன், சசிகுமார் வேலு, நீலமேகம், முருகன், நல்ல கருங்கு, தர்மலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது பாராட்டுகளை மனதார தெரிவித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments