Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் மறுவாழ்வு மையங்கள் – தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அரசாணையின் அடிப்படையில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் இரவல் பெறுபவர்களின் மறுவாழ்வு மையங்கள் SMILE “Support for Marginalized Individuals for Livelihood and Enterprise” விருப்பமுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

இரவல் பெறுவோர்கள் குறித்து கணக்கெடுத்தல் மற்றும் அடையாளம் காணுதல், அவர்களுக்கு அடிப்படை வசதிகளான, உணவு. உடை, இருப்பிடம், சுகாதாரம், மருத்துவ வசதிகள், ஆற்றுப்படுத்துதல் மற்றும் கல்வி போன்றவற்றை வழங்குதல் மற்றும் திறன் வளர்ப்பு தொழிற்கல்வி மூலமாக நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்க வேண்டும்.

தெரிவு செய்யப்படுகின்ற நிறுவனங்கள், பொது இடங்கள், தெருக்கள், பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் மதம் சார்ந்த இடங்களில் இரவல் பெறுவோர்களை மீட்டெடுத்தல், அவர்களின் குடும்பங்களை வலுப்படுத்துதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் செயல்முறைகள் செயல்படுத்துதல், மறுவாழ்வு ஏற்படுத்தி சமூகத்தில் இணைத்தல்,

வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் சிறுகடன் மற்றும் மானியத்துடன் கூடிய சுய தொழில் தொடங்க ஊக்கப்படுத்துதல் போன்ற செயல்பாடுகளை செயல்படுத்தி அவர்களின் மறுவாழ்வு குறித்த கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

விருப்பமுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் 15 தினங்களுக்குள் (21.01.2025) தங்களது கருத்துருக்களை மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு. கலையரங்கம் வளாகம், கண்டோன்மென்ட், திருச்சிராப்பள்ளி (தொலைப்பேசி எண்-0431-2413055, 8122201098) என்ற முகவரியில் சமர்ப்பிக்குமாறு திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *