திருச்சி வடக்கு தாராநல்லூரை சேர்ந்தவர் மோகன்தாஸ் (35), பைனான்சியர். இவரது மனைவி எஸ்தர் என்ற ஈஸ்வரி (30). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. நேற்று முன்தினம் இரவு இருவரும் வீட்டில் தற்கொலை செய்து கொண்டனர்.
இதுக்குறித்து வழக்கு பதிவு செய்த காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ‘திடுக்கிடும்’ தகவல்கள் வெளியாகி உள்ளது. மோகன்தாஸ் அதே பகுதியை சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் தினேஷ் என்பவரிடம் ரூ.16 லட்சம் கடன் வாங்கி, அந்த பணத்தை சிலருக்கு வட்டிக்கு கொடுத்துள்ளார். கொரோனா காலத்தில் கடன் கொடுத்த இடத்தில் வட்டி, அசல் பணமும் திரும்ப வரவில்லை. பணத்தை திரும்பக் கேட்டு மோகன்தாசுக்கு தினேஷ் நெருக்கடி கொடுத்துள்ளார்.
வாங்கிய கடனுக்கு அடமானமாக தனது வீட்டை தினேசுக்கு எழுதி கொடுத்ததாக கூறப்படுகிறது. சில நாட்களாக பணத்தை கொடு, இல்லை வீட்டை காலி செய் என தினேஷ் மிரட்டியுள்ளார். இதனால் கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டதும், தற்கொலை செய்வதற்கு முன்பு மோகன்தாஸ் தனது டைரியில் தற்கொலைக்கு காரணம், யார் யார் பணம் கொடுக்காமல் ஏமாற்றினார்கள் என்ற விபரமும் எழுதி வைத்திருந்தார்.
இதைத்தொடர்ந்து தினேஷ் மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். தொண்டு நிறுவனங்கள் நடத்தி வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் தினேஷ், 2 ஆண்டுகளுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் கையால் சிறந்த இளைஞருக்கான விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments