Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

மதுவிற்கு ஆசைப்பட்டு மனைவியை இழந்த கணவன் – நடவடிக்கை எடுக்க ஐஜியிடம் புகார்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே மேட்டுத்தெரு பகுதியில் வசிப்பவர் வின்சென்ட் லதா தம்பதி. அதே பகுதியில் வின்சென்ட்க்கு அசோக் என்ற நண்பர் உண்டு. கடந்த நவம்பர் மாதம் வின்சென்டின் பிறந்தநாளுக்கு அவரது வீட்டிற்கு சென்றுள்ளார் அசோக்.

Advertisement

பிறந்த நாளை கொண்டாடி விட்டு அன்று இரவு முழுவதும் இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி உள்ளனர். மதுபோதையில் வின்சென்ட் உறங்கிவிட இதனை சாக்காக வைத்துக் கொண்டு அசோக் வின்சென்ட் மனைவி லதாவிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார்.

Advertisement

மன்மத லீலையில் மயங்கி லதா வீட்டின் பின்புறம் இருவரும் உல்லாசத்தில் ஈடுபட்டனர். திடீரென தன் கணவர் வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை என வின்சென்ட் வீட்டிற்கு சென்று பார்த்த அசோக்கின் மனைவி செலினா மெரி இருவரும் தனிமையில் தகாத உறவில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வின்சென்ட் மனைவியை கன்னத்தில் அறைந்த செலினா மேரி. இதுகுறித்து லதாவின் கணவர் வின்சனிடம் இருவரும் தகாத உறவில் ஈடுபட்டுயிருந்தனர். அதனால் லதாவை கன்னத்தில் அரைந்ததாகவும் உன் மனைவியை ஊர் பஞ்சாயத்தில் வைத்து கேவலப்படுத்தி விடுவோம் என அசோக்கின் தாய் ரூசேஸ்மேரி தம்பி தீபன் ராஜ் மற்றும் அசோக்கின் மனைவி ஆகியோர் சேர்ந்து லதாவை அச்சத்தில் உறைய வைத்துள்ளனர். இதனையடுத்து மனமுடைந்த லதா வீட்டின் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து நவல்பட்டு காவல் நிலையத்தில் வின்சென்ட் வழக்குப் பதிவு செய்துள்ளார். ஆனால் காவல்துறையினர் அவர்களுக்கு சாதகமாக இருப்பதாகவும் என்னுடைய மனைவியை மிரட்டி தற்கொலைக்கு தூண்டிய அசோக் – செலினா மேரி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்று மத்திய மண்டல ஐஜி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *