Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

இராப்பத்து 9 ஆம் நாள் – வெள்ளை நிற வஸ்திரம், பனிக்குல்லா அணிந்த நம்பெருமாள்

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் : இராப்பத்து 9 ஆம் நாள் திருவாய்மொழி பிரபந்திற்காக, நம்பெருமாள் வெள்ளை நிற வஸ்திரம் அணிந்து, பனிக்குல்லா அணிந்து, அதன் மேல் கலிங்கத்துராய், சந்திர ஹாரம், வெள்ளை கல் வில்வ பதக்கம், சிகப்புக் கல் நெற்றி சரம் சாற்றி; மகர கர்ண பத்திரம்: வைர அபய ஹஸ்தம்;

திருமார்பில் – பங்குனி உத்திர பதக்கம், அதன் மேல் அழகிய மணவாளன் பதக்கம் – இரு புறமும் நாச்சியார் பதக்கம் அணிந்து – ரங்கூன் அட்டிகை: நெல்லிக்காய் மாலை; 6 வட‌ (18 பிடி) முத்து சரம் அணிந்து; 2 வட முத்து சரம்; காசு மாலை; அடுக்கு பதக்கங்கள் சாற்றி

பின்புறம் – புஜ கீர்த்தி; அண்ட பேரண்ட பக்ஷி பதக்கம்; தாயத்து சரங்கள் கையில் சாற்றி; தங்க தண்டைகள் திருவடியில் அணிந்து சேவை சாதிக்கிறார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *