தெற்கு ரயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர், ஜிஎம் ஈஸ்வர ராவ், உத்தரவின் பேரில் திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலை கோட்ட ஆணையர் Dr. அபிஷேக் மற்றும் உதவி ஆணையர் பிரமோத் நாயர் ஆகியோர்களது மேற்பார்வையில் திருச்சி RPF இன்ஸ்பெக்டர் K. P. செபாஸ்டியன் அவர்கள் தலைமையில், சந்தீப்,
உதவி ஆய்வாளர் மற்றும் படை அங்கத்தினர் வழக்கமான ரோந்து பணியின் போது 01 மனநலம் குன்றிய பெண் மற்றும் 02 முதியவர்கள் திருச்சி ரயில் நிலைய பிரதான நுழைவாயில் பகுதியில் நடமாடுவதைக் கவனித்தனர். பின்னர் விசாரணையில், அவர்களின் பெயர் முகவரி, 1)அஞ்சலி, (28) (மனநலம் குன்றியவர்), வண்டிப்பெரியார், திருச்செந்தூர், 2) ரங்கநாதன் (80), S/o. மகாலிங்கம் ஆச்சார்யா, 5/39, பெருமாள் கோவில் தெரு, திருச்சி -03 மற்றும்
3) சரோஜா (90), W/o சண்முகம் (late), திருநெல்வேலி (மாவட்டம்) என தெரிய வந்தது. மேற்குறிப்பிட்டவர்கள் பத்திரமாகப் மீட்கப்பட்டு ஸ்ரீ அறக்கட்டளை முதியோர் இல்லம் மற்றும் மனநோயாளிகள் இல்லம், திருச்சியில் மேலதிக பராமரிப்புக்காகவும், பாதுகாப்பிற்காகவும் ஒப்படைக்கப்பட்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments