சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வந்தடைந்தார். பின்னர் விமானத்திலிருந்து இறங்க முற்பட்டவுடன் சிறிது நேரத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அவரை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்பொழுது அவருக்கு தொடர் சிகிச்சை ஏற்பட்டுள்ளது. அமைச்சர் தற்போது நலமுடன் இருப்பதாக தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சட்டத்துறை அமைச்சர் நாளை டிஸ்சார்ஜ் ஆவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

13 Jun, 2025
389
25 January, 2025










Comments