Advertisement
வேளாண் சட்டத்தை ரத்து செய்ய கோரி விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சியில் ஏர் கலப்பை பேரணி நடைபெற்றது.
Advertisement
மத்திய அரசு டெல்லியில் இயற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் வேளாண் உபகரணங்கள் ஏர் கலப்பை பேரணியை திருச்சி அண்ணாமலை நகர் பகுதியில் நடைபெற்றது.
விவசாயிகள் கரூர் சாலையில் பேரணியாக வந்து கோகினூர் தியேட்டர் சிக்னல் அருகே திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 30 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு கடும் நெரிசல் ஏற்பட்டது.
பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பின் விவசாயிகளை கைது செய்தனர்.
Advertisement
Comments