Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

“பாரத சாரண – சாரணியர் இயக்க வைரவிழா” மற்றும் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணியை தொடங்கி வைத்த தமிழ்நாடு துணை முதலமைச்சர்

திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் வளாகத்தில் பாரத சாரண – சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி (special Jamboree) விழாவை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியேற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வருகை தந்த துணை முதலமைச்சருக்கு சாலையில் நின்று இருந்த பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தார்கள்.

தொடர்ந்து விழா நடைபெறும் தொடக்க வாயிலிருந்து தாரை தப்பட்டை முழுங்க கரகாட்டம் ஆடியும், பெண்கள் முளைப்பாரி கையில் ஏந்தி துணை முதலமைச்சரை வரவேற்றார்கள். அதனைத் தொடர்ந்து முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா வரலாற்று சிறப்பு புகைப்பட கண்காட்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். அதற்கு முன்னதாக காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர் சிறப்பு புகைப்பட கண்காட்சி அரங்கம் வெளியே வைக்கப்பட்டுள்ள முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவரின் திருவுருவச் சிலைக்கும், புகைப்படம் அரங்கம் உள்ளே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 500 -க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, ஒவ்வொரு புகைப்படத்திலும் நான்கிலிருந்து மூன்று புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது, திருக்குவளை இல்லத்தில் அன்னை அஞ்சுகத் தாய்க்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய புகைப்படம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் திறப்பு உள்ளிட்ட கலைஞர் அவர்களால் தமிழ்நாட்டிற்க செய்த சாதனைகள் அடங்கிய சிறப்பு வாழ்ந்த புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது…

அதனைத் தொடர்ந்து குளோபல் டெவலப்மென்ட் வில்லேஜை தொடங்கி வைத்து பார்வையிட்டார். பிறகு பாரம்பரிய முறைப்படி சாரண சாரணியரின் சார்பாக துணை முதல்வர் அவர்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டது.தொடர்ந்து பாரத சாரண – சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி (special Jamboree) விழாவை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியேற்றி தொடங்கி வைத்து இலங்கை, மலேஷியா, சவுதி அரேபியா, நேபால், மற்றும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில பாரத சாரண – சாரணியர் கம்பீரமாக அணி வகுத்து வந்தனர், அணி வகுப்பு மரியாதையை துணை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டார்….

20 ஆயிரம் பாரத சாரண – சாரணியர் எழுந்து நின்று அவர்கள் முறைப்படி கைதட்டி துணை முதமைச்சரை வரவேற்றனர். முதலாவதாக தமிழ்நாடு பாரத சாரண – சாரணியரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இந்தியாவின் அனைத்து மாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தங்கள் கலாச்சாரம், பண்பாடு குறித்த செயல்பாடுகளை நிகழ்த்திக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடத்தினார்கள்….

வைர விழா பெருந்திரளணி குறித்த சிறப்பிதழ் மற்றும் அஞ்சல் உறையை துணை முதலமைச்சர் வெளியிட்டார். தொடர்ந்து கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் சிறப்பு கையேட்டினை வெளியிட்டார். இறுதியாக 20,000 பேர் ஒரே இடத்தில் ஒன்றுகூடி உலக சாதனை படைத்தனர்… இதில் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் யு.டி.காதர், பாரத சாரண – சாரணியர் இயக்கத்தின் தேசிய முதன்மை ஆணையர் முனைவர் கே.கே.கண்டேல்வால் இ.ஆ.ப(ஓய்வு), பாரத சாரண – சாரணியர் இயக்கத்தின் தலைவர் முனைவர் அனில்குமார் ஜெயின், தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தலைவரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, வைரவிழாவின் துணைத் தலைவரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு, வைரவிழாவின் துணைத் தலைவரும், மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன், வைரவிழாவின் துணைத் தலைவரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் துரை வைகோ , ஜோதிமணி , சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரராஜன், பழனியாண்டி, முத்துராஜா, அப்துல் சமது, பள்ளிக் கல்வித் துறை அரசு செயலாளர் மதுமதி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்கள்….

தொடர்ந்து விழா மேடையில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…… 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் வணக்கம் சொல்லிய தனது உரையை தொடங்கிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். 2000 ஆம் ஆண்டு தான் கலைஞர் அவர்கள் ஆட்சி காலத்தில் 50 ஆவது ஆண்டு நிகழ்ச்சி நடந்தது. நம்முடைய முதலமைச்சர் ஆட்சியில் வைர விழா நடக்கிறது, 39 கோடியை அரசு இந்த நிகழ்ச்சிக்கு ஒதுக்கியது, 3 மாதங்களாக அன்பில் மகேஷ் இந்த பணியை செய்து வருகிறார், சமீபத்தில் ஸ்கவுட் டிரஸ்சில் அமைச்சர் வந்தார், இந்த நிகழ்ச்சியோடு அவர் ஒன்றி போய்விட்டார்.

தமிழ்நாடு கலாச்சார பாரம்பரியங்களை தெரிந்து கொள்ள உங்களுக்கு இந்த நிகழ்ச்சி உதவியாக அமையும், அதேபோல் மற்ற மாநில கலாச்சாரத்தையும் தெரிந்து கொள்ள உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். உங்கள் படிப்பை தவிர சிறந்த முறையில் வாழ்க்கையை கற்று கொள்ள உதவும், இது மாதிரியான அனுபவம் கிடைப்பது விலை மதிப்பில்லாத கிடைக்காத சொத்து. ஜாதி மதத்தை கடந்து இந்தியாவின் குடிமகன் என்று அனைவரும் ஒரே இடத்தில் கூடி உள்ளீர்கள், மனிதர்கள் வேறுபாடு பார்க்காமல், ஒன்று கூடி வாழ வேண்டும் என்பதுதான் கலைஞர் அவர்களின் குறிக்கோள், பெரியார் சமத்துவபுரம் திட்டம் ஒருவர் சிறந்த திட்டம். அனைவரும் ஒன்றாக கூடி வாழ வேண்டும் என்பதுதான் பெரியார் சமத்துவபுரம் திட்டம், கலைஞர் நூற்றாண்டு விழாவில் இந்த நிகழ்ச்சி நடைபெறுவதில் தமிழ்நாட்டிற்கு பெருமை, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறினார்.

முன்னதாக பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்…… தமிழ்நாடு பண்டைய நாகரிகம், பாரம்பரியம், அமைதி மற்றும் எல்லையில்லா அன்பின் பூமி. தமிழகம் வந்துள்ள அனைத்து சகோதர சகோதரிகளையும் அன்புடன் வரவேற்கிறேன். தமிழக மக்கள் கலாச்சாரம் மட்டுமின்றி அறிவியல் தொழில்நுட்பத்திலும் சிறந்து விளங்குகின்றனர். சமீபத்தில் நமது முதலமைச்சர் 5,600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இரும்புப் பயன்பாடு அதிகமாக இருந்தது என்பதை அறிவியல் சான்றுகளின் மூலம் உலகுக்குப் பெருமையுடன் அறிவித்தார். மீண்டும் ஒருமுறை, இந்த மகத்தான மற்றும் பெருமைமிக்க மண்ணை உங்கள் மதிப்பிற்குரிய இருப்புடன் கௌரவித்த உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன். இந்த நேரத்தில், நமது மாற்றுத் தலைவர்களான தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் கொள்கைகள் மற்றும் சித்தாந்தங்கள் நம்மை இன்று இருக்கும் நிலைக்கு உருவாக்கித் தந்ததற்கு நினைவு கூர்கிறேன்.

நவீன தமிழ்நாட்டின் சிற்பியான முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் பாரத சாரணர் மற்றும் வழிகாட்டிகளின் பொன்விழா கொண்டாட்டங்களை சிறப்பாக ஏற்பாடு செய்தார். அவரது பாரம்பரியத்தையும், அவர் வகுத்த பாதையையும் பின்பற்றி, இந்த வைரவிழா நிகழ்ச்சிக்கு தேவையான அனைத்து ஆதரவையும் ஊக்கத்தையும் நமது முதலமைச்சர் அவர்கள் வழங்கி வருகிறார். முதலமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கலாசாரம், அறிவியல் தொழில்நுட்பம் மட்டுமின்றி, சாரணர் மற்றும் வழிகாட்டி சேவையிலும் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது என்பதை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது.

சாரணர் இயக்கம் 1907 இல் இங்கிலாந்தில் பேடன் பவல் பிரபுவால் நிறுவப்பட்டது. இது படிப்படியாக உலகம் முழுவதும் பரவியபோது, தமிழ்நாடு 1919 ஆம் ஆண்டிலேயே சாரணர் இயக்கத்தை ஏற்றுக்கொண்டது, இது பல பகுதிகளை விட மிகவும் முன்னதாகவே. முதலில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சாரணர் இயக்கங்கள் நிறுவப்பட்டு மண்டல அளவில் செயல்படத் தொடங்கின. பலர் இந்த இயக்கத்தில் ஆர்வத்துடன் இணைந்து மிகுந்த அர்ப்பணிப்புடன் சேவை செய்யத் தொடங்கினர்.

1929 ஆம் ஆண்டு லண்டனில் உள்ள பிர்கன்ஹெட் அரோவ் பூங்காவில் நடைபெற்ற உலக ஜாம்போரியில் தமிழ்நாடு சாரணர்கள் கலந்து கொண்டனர். சாரணர் இயக்கத்தின் மீது தமிழ்நாடு காட்டிய ஆழ்ந்த அர்ப்பணிப்பை காட்டுகிறது. இயக்கத்தின் நிறுவனர், லார்ட் பேடன் பவல், சிறுவர்களுக்கான சாரணர் என்ற புத்தகத்தை எழுதி, அதை பரவலாக விநியோகித்தார். இந்த புத்தகம் அனைத்து முக்கிய இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது, ஆனால் அது தமிழில் மொழி பெயர்க்கப்படவில்லை. முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில்தான் இந்நூலின் தமிழாக்கம் செய்யப்பட்டது. பாரத சாரணர் மற்றும் வழிகாட்டி வைர விழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு சிறப்பு ஜம்போரி உங்கள் அனுபவம். கலந்து கொள்ளும் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.

பாரத் சாரணர் மற்றும் வழிகாட்டிகளின் பொன்விழாவை முத்தமிழ் அறிஞர் கலைஞர் தமிழ்நாட்டில் மிகப் பிரமாண்டமாக நடத்தினார். அப்போதைய கல்வி அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் தலைமையில் சென்னையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. சாரணர் இயக்கத்தின் பொன்விழா கொண்டாட்டங்கள் முழு தேசத்தின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் நடைபெறுவதை முத்தமிழ் அறிஞர் கலைஞர் உறுதி செய்தார். அந்த வரலாற்றுப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக, தற்போதைய திராவிடர் கழக அரசு இந்த வைர விழா நிகழ்ச்சியை நடத்துகிறது என்றார்.

கர்நாடக துணை முதலைசர் டி.கே.சிவகுமார் பேச்சு…… துணை முதல்வருக்கு முதலில் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன், உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். உலகின் பல நாடுகளில் இருந்து வந்தவர்களை பார்பாதில் மகிழ்ச்சி. இந்த மாநிலம் சிறந்த விளங்கி வருகிறது அதற்கு காரணம் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் தொலைநோக்கு திட்டம் என்றார்.

பாரத சாரண – சாரணியர் இயக்கத்தின் தேசிய முதன்மை ஆணையர் முனைவர் கே.கே.கண்டேல்வால் இ.ஆ.ப(ஓய்வு) பேசுகையில்…….. இது ஒரு சிறப்பான நிகழ்ச்சி, 75 ஆவது ஆண்டு விழாவை நாம் இங்கு கொண்டாடி வருகிறோம். கலைஞர் அவர்கள் இலக்கியத்திற்காகவும், சமூகத்திற்காகவும் போராடியவர், பன்முகத்தன்மை கொண்டவர் கலைஞர். ஒரு மாநில தலைவர் மட்டும் கிடையாது அவர் ஒரு தொலைநோக்கு பார்வையுடையவர் என்றார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *