பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருச்சி வந்திருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் சந்தித்து, பட்டாடை அணிவித்து வரவேற்று, மரியாதை செலுத்தினார்.
பின்னர் இந்த சந்திப்பில்……, மக்காச்சோளத்திற்கு விதிக்கப்பட்டுள்ள ஒரு விழுக்காடு செஸ் வரியை நீக்கிட வேண்டும் என்ற விவசாயப் பெருங்குடி மக்களுக்கான எனது கோரிக்கையை கொடுத்து, அதன் அவசியத்தை எடுத்துரைத்தேன். முதல்வர் அவர்களும் கனிவோடு கேட்டுக்கொண்டு, பரிசீலிப்பதாகவும் கூறினார்கள். அவரது வார்த்தை எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை வழங்கியது.
இந்த சந்திப்பில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில விவசாய அணி செயலாளர் வாரணாசி ராஜேந்திரன் அவர்களும். தென்மண்டல மற்றும் பெரம்பலூர் மாவட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும் உடன் இருந்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments