திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவன குடியிருப்பு டி4 பகுதியில் வசித்து வரும் வில்சன் ஆல்பர்ட் இவர் பெல் நிறுவனத்தில் தரக் கட்டுப்பாட்டு துறை மேலாளராக பணியாற்றி வருகிறார் இவரது மனைவியும் பெல் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் மூத்த ஆண் குழந்தையை பள்ளிக்குச் செல்ல தனியார் பள்ளிவெனில் ஏற்றுக் கொண்டிருந்த போது இவரது ஒன்றரை வயது ஆண் குழந்தை வேனின் முன் பகுதிக்கு செல்ல இதை கவனிக்காமல் வேன் டிரைவர் வேனை எடுக்க முற்பட்டபோது முன் சக்கரத்தில் சிக்கி சக்கரம் ஏறி இறங்கியதில் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு குழந்தையின் உடல் பெல் நிறுவன மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
Comments