மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க மறுக்கும் தமிழக அரசை கண்டித்து மத்திய பேருந்து நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கைது.
Advertisement
மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசின் வருவாய்த்துறை மூலம் வழங்கப்பட்டுவரும் மாதாந்திர உதவித் தொகையினை 1,000 ரூபாயை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கவேண்டும், அதேபோல முழுவதுமாக பாதிப்புக்குள்ளான மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வழங்கப்பட்டுவரும் 1500 ரூபாய் 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்ககோரி தொடர்ந்து தமிழக அரசிடம் வலியுறுத்தி வந்த நிலையில் தமிழக அரசு இதுவரையிலும் எந்தவித பரிசோதனையும் செய்யாத நிலையில் மாற்றுத்திறனாளிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலை முன்பு மாற்றுத்திறனாளிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷமிட்டவாறு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.
Advertisement
தமிழகம் முழுவதும் நேற்று 200 இடங்களில் அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் நடைபெற்றதுடன், திருச்சியில் 4 மையங்களில் போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டு இரவு முழுவதும் மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் தங்களது போராட்டத்தை தொடர்வதாகவும், தங்களது கோரிக்கைகள் அரசு நிறைவேற்றும்வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்தனர்.
Advertisement
Comments