Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி மாநகராட்சியில் ரூ128.95 கோடி பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் 2025-2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கையை மாமன்ற கூட்டாரங்கில் (26.03.2025)ம் தேதி மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் அவர்களிடம் நிதிக்குழு தலைவர் திரு. தி.முத்து செல்வம் அவர்கள் தாக்கல் செய்தார்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் நிலுவையில் உள்ள வரி மற்றும் வரியில்லா இனங்கள் நிலுவையின்றி வசூல் செய்யப்பட்டு, கீழ்க்கண்ட பணிகள் பொதுநிதியின் கீழ் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.

• நீதிமன்றம் முதல் விமான நிலையம் வரை புராதன (Heritage Lamps) தெருவிளக்குகள் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

• வெஸ்ட்ரி பள்ளி அருகிலும் மற்றும் அலெக்சாண்டிரியா சாலையிலும் இடவசதிக்கேற்ப சாலையோரப் பூங்காக்கள் தலா ரூ.1.00 கோடி மதிப்பீட்டில், மொத்தம் ரூ.2.00 கோடி செலவில்அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

 கோட்டத்திற்கு ஒன்று வீதம் 5 கோட்டங்களிலும் உணவுத் தெரு (Food Street) தலா ரூ.1.00 கோடி மதிப்பீட்டில், மொத்தம் ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

 வெள்ள பாதுகாப்பு உந்து நிலையங்கள், வெள்ள அபாயமுள்ள 5 இடங்களில் மொத்தம் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில், தலா ரூ.2.00 கோடி வீதம், கட்டுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்

விடுபட்ட அனைத்து தெருக்களுக்கும் தெருப்பெயர் பலகைகள் ரூ.1.00 கோடி மதிப்பீட்டில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

• அனைத்து சாலைகளிலும் உள்ள சாலை மையத் தடுப்பு சுவர்கள், வேகத்தடைகளில் வெள்ளை வர்ணம் பூசப்படும் மற்றும் சாலை சந்திப்புகளில் ஒளிரும் சாலை ஸ்டட்கள் ரூ.2.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

• இம்மாநகராட்சி பகுதிகளில் ஏற்கனவே உள்ள தெருவிளக்குகளில் வெளிச்சம் குறைவாக உள்ள 20 வாட்ஸ் எல்.இ.டி மின்விளக்குகளை அகற்றிவிட்டு புதிதாக 4000 எண்கள் 40 வாட்ஸ் எல்.இ.டி மின்விளக்குகளாக மாற்றுவதற்கு ரூ.2.00 கோடிக்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

  கிழ்க்கண்ட பணிகள் மாண்புமிகு நகர்ப்புற அமைச்சர் அவர்கள் வழியாக அரசிடம் உரிய நிதியுதவி பெற்று மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும்

• பஞ்சப்பூர் பகுதியில் சுமார் ரூ.115.00 கோடி மதிப்பீட்டில் 19.20 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி சக்தியில் மின்சாரம் தயாரிக்கும் மையம் கட்டுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

 பட்ஜெட் தாக்கல் செய்யும் பொழுது அருகில் மாநகராட்சி ஆணையர் திரு.வேசரவணன் இ.ஆ.ப., துணை மேயர் திருமதி ஜி. திவ்யா மற்றும் மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் , மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *