பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக போற்றப்படுவது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி கோயில். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனித் தேரோட்டத் திருவிழா பிரசித்திப் பெற்றது.
திருவானைக்காவல் கோயிலில் மண்டல பிரம்மோற்சவ பெருவிழா 08.03.25 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.தொடர்ந்து 25ம் தேதி எட்டுத்திக்கு கொடியேற்றம் நடைபெற்றது.நேற்று இரவு 29ம் தேதி தெருவடைச்சான் எனப்படும் சப்பர ஊர்வலம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனித் தேரோட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான இரண்டு தேரில், முதல் தேரில் சுவாமி மற்றும் அம்பாள் எழுந்தருளி உள்ளனர். பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். அம்பாள் எழுந்தருளி உள்ள இரண்டாவது தேர், முதல் தேர் நிலைக்கு வந்த பிறகு பக்தர்களால் இழுக்கப்படுவது வழக்கம்.
திரளான பக்தர்கள் பங்கேற்று ஓம் நமச்சிவாய, அரோகரா என்ற முழக்கங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.சிவ வாத்தியங்கள் முழங்க, பாராயணம் பாடியபடி தேர் கோயிலின் நான்கு வீதிகளில் வலம் வருகிறது.பக்தர்களுக்கான குடிநீர் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை இந்து சமய அறநிலையத்துறை, கோயில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், திருச்சி மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளனர்.
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments