திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு போலீஸ் காலனி 24 ஆவது ஆண்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு மின் அலங்காரத்துடன் பூ சொரிதல் திருவிழா நடந்தது.
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பங்குனி மாதம் வரை பூச்சொரிதல் திருவிழா நடைபெறுவது வழக்கம்.அதற்கு ஒவ்வொரு பக்தர்களும் மின் அலங்காரத்தில் வான வேடிக்கை மேளதாளங்கள் உடன் ஞாயிற்றுக்கிழமைகளில் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்துடன் பூ எடுத்துக்கொண்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வருவது வழக்கம்.
அப்படி திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு போலீஸ்காலனியில் உள்ள ஞான விநாயகர் ஆலயத்தில் இருந்து மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊரை வளம் வந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பூ சொரிதல் விழா கிராமத்தினர் சார்பில் எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த விழாவில் போலீஸ் காலனியைச் சேர்ந்த பொதுமக்களும் பக்தர்களும் மாரியம்மன் சிலைக்கு போர் சொரிந்து வழிபாடு செய்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments