திருச்சி காட்டூரில் ஸ்ரீ பரமஹம்ச பி.எச்எல் நர்சரி பிரைமரி ஸ்கூல் இயங்கி வருகிறது. இப்பள்ளியின் ஆண்டு விழா இன்று நடைபெற்றது. ஆவது பள்ளியின் 36வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக
திருப்பராய்துறை ராமகிருஷ்ண தபோவன தலைவர் ஸ்ரீமத் சுவாமி சுதா ஆனந்தா மகாராஜா, ராமகிருஷ்ணா தபோவன செயலாளர் சத்யானந்தா மகராஜ் இருவரும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பு விருந்தினராக பிஹெச்எல் மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரி தீபா பாலாஜிகலந்து கொண்டார்.பள்ளி ஆண்டு விழாவில் சிறு குழந்தைகள் ஏராளமான யோகாசனங்களை செய்து அனைவரையும் அசத்தினர். பரதநாட்டியம், பானை மீது அமர்ந்து ஆசனம் கயிறு மீது ஏறி
யோகாசனங்களை செய்து மாணவர்கள் அனைவரும் மெய்சிலிர்க்க வைத்தனர் மல்லர் கம்பத்தில் மாணவர்கள் சாகசங்களை செயது காண்பித்தனர். முன்னதாக மாணவர்களுக்கு ராமகிருஷ்ண தபோவன தலைவர், சிறப்பு விருந்தினர் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments