நேற்று இரவு திருச்சி மாநகரை ரவுண்டு கட்டு அடித்த திருச்சி மாநகர காவல் துறை போலீசார்.
திருச்சி மாநகரில் மதுபான கூடங்களுடன் அறைகள் உள்ள விடுதிகளில் அதிரடியாக காவல்துறை அதிகாரிகள் உதவி ஆணையர்கள்,காவல் ஆய்வாளர்கள் என பெரும் படையை திரட்டி மாநகர காவல் ஆணையர் காமினி அதிரடி சோதனை நடத்த உத்தரவிட்டார். ஏராளமான மதுபானக்கூடங்களில் சட்டத்திற்கு புறம்பான
செயல்கள் ஏதும் நடக்கிறதா என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நடந்த சோதனையில் ஏராளமானோரை பிடித்து அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ரைய்டுக்கு
பிரபலமான விடுதியில் 50க்கும் மேற்பட்ட போலீசார் சாலையில் வாகனங்களை நிறுத்தி அதிரடியாக சோதனை ஈடுபட்டு அந்தப் பகுதியை பரபரப்புக்கு உள்ளாக்கினர். மாநகர் முழுவதும் 2 மணி நேர சோதனையில் ஏராளமானோர் பிடித்து வைத்து சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடக்கூடாது என காவல் அதிகாரிகள் அறிவுரை வழங்கி
அனுப்பி வைத்தனர். இந்த ரெய்டால் நேற்று சனிக்கிழமை நாளில் திருச்சி மாநகர் மதுபானக்கூடங்களுடன் கூடிய விடுதியில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments