திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை – டெல்லி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுக்கப்பட்டுள்ளனர்
தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சரும் திமுக முதன்மை செயலாளருமான கே என் நேருவின் தில்லைநகரில் உள்ள அவரது வீட்டிற்கு வந்த அமலாக்க துறையின் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்
இதேபோல் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.மேலும், தில்லைநகர் 10வது கிராஸ் உள்ள அமைச்சருக்கு தம்பியான ராம ஜெயம் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
டெல்லியில் இருந்து திருச்சி வந்து அமலாக்கதுறையினர் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.தற்போது அமலாக்கத்துறையினால் சோதனை நடத்தப்பட்டு வரும் வீடுகளில் பத்துக்கும் மேற்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்..
தற்போது தில்லை நகரில் கே எம் நேரு வீட்டில் அவர் ஆதரவாளர்கள் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து தமிழக காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments