Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

நியூரோஒன் மற்றும் ரத்னா குளோபல்ஸ் மருத்துவமனை இணைந்து காவல் நிலையங்களுக்கு முதலுதவி பெட்டி வழங்கும் விழா

திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களுக்கு நீயூரோஒன் மருத்துவமனை மற்றும் ரத்னா குளோபல்ஸ் மருத்துவமனை இணைந்து முதல் உதவி பெட்டி வழங்கும் விழா இன்று (09.4.2025) திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள திருமாங்கல்யம் மஹாலில் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் டாக்டர் வி.வருண்குமார் அவர்கள் கலந்து கொண்டார் மேலும் நீயூரோ ஒன் மருத்துவமனையில் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் விஜயகுமார் ரத்னா குளோபல் மருத்துவமனையில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை மருத்துவர் பிரவீன் தாஸ் மற்றும்

மகப்பேறு மகளிர் நல மருத்துவர் பிரியா பிரவீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.மேற்படி விழாவில் காவலர்களுக்கு முதலுதவி பெட்டியில் உள்ள உபகரணங்கள் பற்றியும் அவற்றை பயன்படுத்தும் முறைகள் பற்றியும் மருத்துவர்கள் விளக்கமாக எடுத்துரைத்தனர். திருச்சி மாவட்டம் சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் போக்குவரத்து காவல் நிலையங்கள் அனைத்து மகளிர் காவல்

நிலையங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகள் என மொத்தம் 53 காவல் நிலையங்களில் இருந்து பெண் காவலர்கள் வரவழைக்கப்பட்டு முதலுதவி பெட்டிகளை அவர்களிடம் அளிப்பதற்காக முக்கியத்துவம் பற்றி திருச்சி சரக காவல்துறை தலைவர் அவர்களால் விளக்கி அனைத்து காவல் நிலைய பொறுப்பு பெண் காவலர்களிடம் முதலுதவி பெட்டிகள் வழங்கப்பட்டன முதல்வர் பெட்டிகள் காவல் நிலையங்களில் உள்ள வரவேற்பு மேசைகள்

வைத்து காவலர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் பயன்படும் வகையில் வைத்து அறிவுறுத்தப்பட்டது.இவ்விழாவில் சிறப்புரையாற்றிய திருச்சி சரக காவல்துறை தலைவர் டாக்டர் வி. அருண்குமார் அவர்கள் முதலுதவி சிகிச்சையின்  முக்கியத்துவத்தை பற்றியும் காவலர்கள் எந்த சூழ்நிலையில் முதல் உதவி சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து மருத்துவர்கள் பாம்பு கடி வெறிநாய்க்கடி வெட்டுக்காயங்கள் விபத்துக்கள்  போது உடனடியாக செய்ய வேண்டிய முதலுதவி

செய்முறைகள் பற்றி காவலர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தனர் மேலும் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது திருச்சி சரகத்திற்கு உட்பட்ட புதுக்கோட்டை அரியலூர் பெரம்பலூர் மற்றும் கரூர் மாவட்டங்கள் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் முதலுதவி பெட்டிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

முதல் உதவி பெட்டியில் உள்ள உபகரணங்கள் மற்றும் பயன்பாடுகள்:

 Tourniquet :ரத்தம் அதிகமாக கொட்டுவதை தற்காலிகமாக தடுக்க மற்றும் பாம்புக் கடியில் விஷம் ரகத்தில் கலக்காமல் கட்ட பயன்படுத்தப்படுகிறது.

Bandage role : சுத்தம் செய்ய மற்றும் மருந்து தேய்க்க.

Tincture :கிருமிகளை அழிக்க

Roller bandage: கட்டுகளை உறுதியாக பிடிக்க உதவும்

 Antibiotic serum : பாதுகாப்பு திரவம் கிருமிகள் எதிரான காயங்களை பாதுகாக்க

 Wound wipes : காயங்களை சுத்தம் செய்ய wooden split: எலும்பு முறிவுக்கு தற்காலிக உறுதிப்படுத்துதல்

Gloves:  தொற்றுகளை தவிர்க்க கையாளும்போது அணிய

Scissor : துணிகளை வெட்ட

Triangle bandage: கை சுளுக்கு போன்ற பகுதிகளை கcnட்டிட சீலிங் போல் பயன்படுத்த

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *