வயலூர் முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழாவில் பக்தர்களை தரக்குறைவாக பேசிய ஜீயபுரம் DSP.டேய் போடா நாயா ம…ரு என ஏக அர்ச்சனை செய்த டிஎஸ்பி -பக்தர்கள் வேதனை
அரியலூர் மாவட்டத்தில் பெண் சிறப்பு சார்பு ஆய்வாளர் புகார் கொடுத்தவரிடம் கைபேசியில் தரக்குறைவாக அவதூறாக பேசியதற்கு திருச்சி சரக டிஐஜி வருண்குமார் ஓபன் மைக்கில் அழைத்து கடுமையாக வறுத்தெடுத்தார். அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து டிஐஜி வருண் குமார் உத்தரவிட்டார். இந்த சூடு குறையாத நிலையில் திருச்சி ஜீயபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பழனி வயலூர்
பங்குனி உத்திர திருவிழாவில் வந்த பக்தர்களை தரகுறைவாகவும் மயிறு எனவும் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொது இடத்தில் ஏராளமான பக்தர்கள் வரும் வயலூர் முருகன் கோவிலில் டிஎஸ்பி நடந்து கொண்ட விதம் அனைவரையும் முகம் சுளிக்க வைத்ததுள்ளது.
ஜீயபுரம் டிஎஸ்பி மொட்டை அடித்து குடும்பத்தினருடன்வந்திருந்தவரை
போடா நாயே…
ஒழுக்கமா வரிசையில் வாடா நாயே என திட்டியதுடன், மயிரு மாதிரி பேசாத என ஏக வார்த்தைகளில் அவமரியாதையாக பேசினார்.சார்பு ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி இரண்டு நாட்களுக்குள் அடுத்து ஒரு டிஎஸ்பி பொதுவெளியில் கோவிலுக்கு வரும் பக்தர்களை
தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளதற்கு டிஐஜியின் கவனிப்பு தொடருமா பொறுத்திருந்து பார்ப்போம்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments