திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் வெள்ளிக் கவசம் அலங்காரம் – நீண்ட வரிசையில் பக்தர்கள் தரிசனம்.”விசுவாவசு” தமிழ் புத்தாண்டு பிறப்பையொட்டி உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் வெகு விமர்சையாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
திருச்சியில் தமிழ் புத்தாண்டு பிறப்பையொட்டி திருச்சிக்கு பெருமை சேர்ப்பதும், தென்கயிலாயம் என்று போற்றப்படுவதுமான மலைக்கோட்டை மட்டுவார் குழலம்மை உடனுறை தாயுமானசுவாமி ஆலயத்தில் மாணிக்க விநாயகர் மற்றும் உச்சிப்பிள்ளையார் ஆகியோருக்கு சிறப்பு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்,
ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments