கேஸ், விலை உயர்வை கண்டித்தும், பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க கோரியும் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் திருவெறும்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் திருவெறும்பூர் ஏப் 16 மத்திய அரசு அண்மையில் கேஸ் விலையை ஏற்றியது.
இதனால் இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்கமான சிஐடியு தொழிற்சங்கம் தமிழ்நாடு முழுதும் தங்களது கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது. இதனை அடுத்து திருச்சி மாவட்ட சிஐடியு

தொழிற்சங்கம் காட்டூர் பகுதி குழு சார்பில் திருவெறும்பூர் கடை வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பு குழு கன்வீனர் செல்வி தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினர்களாக சிஐடியு தொழிற்சங்க மாவட்ட தலைவர் டி சீனிவாசன் செயலாளர் எஸ் ரங்கராஜன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர்
தங்கதுரை, விவசாய சங்க மாவட்ட தலைவர் கே சி பாண்டியன், தரைக்கடை வியாபாரிகள் சங்க மாவட்டத் துணைத் தலைவர் டி. கணேசன், சி ஐ டி யு தலைவர் பசுபதி ராஜ், ஆகியோர் கலந்து கொண்டு கேஸ் விலை
உயர்வை மத்திய அரசு உயர்த்தியதற்கு கடும் கண்டனத்தையும் பெட்ரோல் டீசல் விலையை உடனே குறைக்க கோரியும் பேசினர். முடிவில் கட்டுமான சங்க செயலாளர் சந்திரசேகரன் நன்றி தெரிவித்தார். இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
13 Jun, 2025
389
16 April, 2025







Comments