திருச்சி ஸ்ரீரங்கம் சித்திரை தேர்த்திருவிழாவை முன்னிட்டு திருத்தேரில் மேளதாளம் முழங்க முகூர்த்தகால் நடும் வைபவம் நடைபெற்றது.ஸ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம் வரும் ஏப்ரல்26ஆம் – தேதி நடைபெற உள்ளது

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்திருவிழா உற்ச்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான சித்திரை தேர் திருவிழா வருகின்ற ஏப்ரல் 26 ம் தேதி அன்று நடைபெற உள்ளது.

வரும் 18-ம் தேதி அதிகாலை மேஷ லக்னத்தில் கொடியேற்றம் தொடங்கி அன்று முதல் சித்திரை தேர் திருவிழா உற்சவம் ஏப்ரல் 28ம் தேதி வரை நடைபெற உள்ளது . உற்சவ நாட்களில் நம்பெருமாள் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெறும்…
இந்த உற்சவத்திற்காக இன்று சித்திரை வீதியில் உள்ள சித்திரை தேரில் முகூர்த்தக்கால் நடும் வைபவம் இன்று நடைபெற்றது. ஸ்ரீரங்கம் கோயில் பட்டாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க பூஜைகள் செய்து தேரின் மீது முகூர்த்தக்கால் நட்டனர். இந்நிகழ்வில் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் திருக்கோவில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
திருத்தேர் முன்பாக முகூர்த்த காலுக்கு கோவில் யானை ஆண்டாள் மற்றும் லட்சுமி மரியாதை செய்தது..சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வுகளாக சித்திரைத் திருவிழாவின் 26ஆம் தேதி அன்று காலை 5.15 மணியளவில் திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
இத்திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர் இந்நிலையில் சித்திரை திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
        
                                            
                            13 Jun, 2025                          
390                          
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
        
 16 April, 2025
            




			

          
                          
            
            
            
            
            
            
            
            
            
            
                          
                          
                          
                          
                          
                          
                          
Comments