உறுதியான நரம்புத் தடுப்புகளை சரிசெய்யும் “ரோட்டாப்ளேஷன் ஆஞ்சியோபிளாஸ்டி” முறையை திருச்சி காவேரி மருத்துவமனை ஹார்ட்சிட்டியில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துகிறது.டெல்டா பகுதியின் இதய சிகிச்சை மையமாக விளங்கும் காவேரி மருத்துவமனை ஹார்ட்சிட்டியில், இந்த நவீன சிகிச்சை முறையை சீரான முறையில் செய்துவரும் ஒரே மருத்துவமனையாக உள்ளது.
டெல்டா மக்களின் பிரத்யேக இதய சிகிச்சை மையமான காவேரி மருத்துவமனை ஹார்ட்சிட்டி, தற்போது ரோட்டாப்ளேஷன் ஆஞ்சியோபிளாஸ்டி எனப்படும் நவீன சிகிச்சை முறையை சிறப்பாக செய்து வருவதில் முக்கிய முன்னேற்றத்தை பெற்றுள்ளது.இதில், நரம்புகளில் திடமாக அமைந்துள்ள கற்களை போல் கற்பை (கால்சிஃபைடு பிளாகேஜ்) கால்சியம் மூடிய பகுதிகளை துளையிட்டு சுத்தம் செய்யப்படுகிறது.நரம்புகளில் ஏற்கனவே செயல்படாத இடங்களில் ரத்த ஓட்டத்தை மீண்டும் புதுப்பிக்க உதவுகிறது.
இந்த சிகிச்சையை தலைமை இண்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் டாக்டர் எஸ். அரவிந்தகுமார் தலைமையில், 2019 முதல் 2024 வரை 40 முறை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர் இதுவரை 8000-க்கும் மேற்பட்ட ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைகள் செய்துள்ளார். டெல்டா பகுதியில் இம்முறையில் சிகிச்சை செய்தது சாதனையாகவே காவேரி ஹார்ட் சிட்டி மருத்துவமனை குறிப்பிடுகிறது.
வயது முதிர்ந்த நோயாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இந்த சிகிச்சை முறை இருக்கிறது .காவேரி ஹார்ட்சிட்டி மருத்துவமனையில் இந்த சிகிச்சை பெற்றவர்களின் சராசரி வயது 75. 2018 ஆம் ஆண்டு தேசிய அளவிலான புள்ளி விவரங்களில், இந்தியாவில் வெறும் 0.77% சிகிச்சைகள் மட்டுமே இம்முறையில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதிரியான சிகிச்சையை ஒரு இரண்டாம் நிலை (Tier 2) நகரத்தில் சிறந்த முறையில் செய்யும் அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளதும்,காவேரி மருத்துவமனையின் சிறப்பைக் காட்டுகிறது.
டாக்டர் அரவிந்தகுமார் கூறும்போது, “வழக்கமான ஆஞ்சியோபிளாஸ்டி முறைகள் செய்ய முடியாத சிக்கலான நோயாளர்களுக்கே இந்த ரோட்டாப்ளேஷன் ஆஞ்சியோபிளாஸ்டி உகந்தது. நம் மருத்துவமனையின் நவீன வசதிகளும், நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவக் குழுவும் இந்த சிகிச்சையை வெற்றிகரமாக நடத்த உதவுகின்றனர்,”என பெருமையுடன் குறிப்பிட்டார்.
காவேரி மருத்துவமனை ஹார்ட்சிட்டியின் தலைமை இதய-நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் நிர்வாக இயக்குநரான டாக்டர் டி. செந்தில்குமார், “இப்போதெல்லாம், இதய சிகிச்சைகளுக்காக மெட்ரோ நகரங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. நம் ஹார்ட்சிட்டியில், சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும், 24 மணி நேரமும் விரைவான மற்றும் சிறந்த இதய சிகிச்சையை வழங்கும் திறன் உள்ளது,” என்றார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments