திருச்சி மாநகராட்சி 12வது வார்டுக்குட்பட்ட நத்தர்ஷா பள்ளிவாசல், ஜீவாநகர் உள்ளிட்ட பகுதிகளில் அசுத்தமான குடிநீர் மற்றும் சுகாதார மின்மையால் 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பலமுறை அதிகாரிகளிடம் சொல்லியும் கண்டுகொள்ளாததால் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மனிதநேய மக்கள் கட்சி சார்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
12வது வார்டுக்குட்பட்ட நத்தர்ஷா பள்ளிவாசல், ஜீவா நகர் உள்ளிட்ட பகுதிகளில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்வதாகவும், தெரு ஓரங்களில் அதிகமாக தேங்கி கிடைப்பதாகவும், குப்பைகளைப் பிரித்து எடுத்துக் கொண்டு போவதற்கு மாநகராட்சி ஊழியர்கள் சரியான சாதனங்களை வைத்திருப்பதில்லை என்றும், தெருவோரங்களில் திறந்தவெளி சாக்கடையை முறையாக தூர்வார்வதில்லை என்றும், அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என்றும், உடனடியாக பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அடுத்து சாலை மறியலில் ஈடுபடுவோம் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த முற்றுகைப் போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் அமீர் அம்ஜா தலைமையில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
Comments