திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடியை சேர்ந்தவர் கந்தசாமி இவரது மகன் குமார் (38) இவர் நேற்று திருவெறும்பூர் பகுதியில் உள்ள ஒரு வங்கி ஏடிஎம்மில் பணம் எடுத்துக்கொண்டு வெளியே வந்த பொழுது தெற்கு காட்டூரை சேர்ந்த கார்த்திக் (எ) மாடு
கார்த்தி ( 30 )இவன் பிரபல ரவுடியாவான் இவன் கத்தியை காட்டி குமாரை மிரட்டி ரூ 500 பறித்து சென்றுள்ளான்.இது சம்பந்தமாக குமார் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் கார்த்தியை கைது செய்து திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
கார்த்தி மீது ஏற்கனவே 4வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments