அங்கான் வாடி மைய ஊழியர்களுக்கு கோடை விடுமுறை அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
அங்கன் வாடி ஊழியர்களுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை வழங்க வேண்டும், நீண்ட ஆண்டுகளாக பணியில் உள்ள ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு
பகுதிகளில் அங்கன் வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அங்கன்வாடி ஊழியர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இரண்டாவது நாளான இன்றும் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொளுத்தும் வெயிலையும்
பொருட்படுத்தாமல் குடைகளை பிடித்தவாறு முக்காடுகள் அணிந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
13 Jun, 2025
390
04 May, 2025







Comments