திருச்சி மாவட்டம் துறையூர் முசிறி பிரிவு சாலை அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் லாரி ஒன்று மணலுடன் நிற்பதாக துறையூர் வட்டாட்சியர் மோகனுக்கு ரகசிய தகவல் சென்றது. இதனை அடுத்து துறையூர்
மண்டல துணை வட்டாட்சியர் விஜய் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் சுரேந்திரன், இளவரசி, வெங்கடேசபுரம் கிராம நிர்வாக அலுவலர் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், அங்கு சென்று லாரி டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் அவர் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியை சார்ந்த பிரசாந்த் (37) என்பதும், அவர் வைத்திருந்த நடை சீட்டை
சரிபார்த்ததில், எம் சாண்ட் கொண்டு செல்வதற்கு அனுமதி பெற்று விட்டு, அனுமதி பெற்றதற்கு மாறாக சுமார் 4 யூனிட் அளவுள்ள அரைக்கப்பட்ட மணலை கடத்தி சென்றதும் தெரிய வந்தது.இதைத் தொடர்ந்து லாரி மற்றும் ஓட்டுநரை துறையூர் காவல்துறையிடம் ஒப்படைத்தனர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஓட்டுநர் பிரசாந்தை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
13 Jun, 2025
389
04 May, 2025







Comments