Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரை தேரோட்டம் -ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

No image available

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரை தேரோட்டம் -ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமான சுவாமி கோவில் சித்திரை தேர் திருவிழாவில் மாண்புமிகு பள்ளிகல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளருமான, அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் இன்று காலை தேர் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார்.

 இந்நிகழ்வில் கிழக்கு மாநகரச் கழகச் செயலாளர் மு மதிவாணன் பகுதி கழக செயலாளர் மோகன் மாமன்ற உறுப்பினர் மணிமேகலை ராஜபாண்டி மற்றும் மலைக்கோட்டை சுவாமி தாயுமானவர் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சீனிவாசன் கருணாநிதி ஸ்ரீதர் கோவிந்தராஜ் கலைசெல்வி திரளான பக்த கோடிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

தென்கயிலாயம் எனப்போற்றப்படுவதுமம், 274- சைவத்தலங்களுக்குள் ஈடுஇணையற்றதாகவும் சிறப்பு பெற்ற, திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும், இங்கு ஆண்டுதோறும் சித்திரைத்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி சித்திரை திருவிழா கடந்த மே 01-ம்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து அம்பாளும், தாயுமானவர்(சிவபெருமானும்) காமதேனு, ரிஷபம், யானை, தங்ககுதிரை, நந்திகேசர், கைலாசபர்வதம், அன்னம் உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வந்தனர். 

தொடர்ந்து கடந்த மே 05-ம்தேதி செட்டிப்பெண் பிரசவம் பார்த்தல் வைபவமும், 06-ம் தேதி திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சியும் நடைபெற்று பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தார்.விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் இன்று காலை 06 மணிக்கு தேர் படம் பிடித்து தொடங்கியது,மலைக்கோட்டை தாயுமானசுவாமி, அலங்கரிக்கப்பட்ட மிகப்பெரிய திருத்தேரில் அம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மற்றொரு தேரில் மட்டுவார் குலழம்மை தாயார் எழுந்தருளினார். முன்னதாக சண்டிகேஷ்வரர் பரிவார மூர்த்திகள் சிறிய தேரில் சென்றன.

தொடர்ந்து பலஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் நமச்சிவாய என்ற பக்தி கோஷமிட்டவாறு தேரைவடம்பிடித்து இழுத்துச் சென்றனர். மலைக்கோட்டை தேரோட்டத்தை முன்னிட்டு பொதுமக்கள் பாதுகாப்பிற்காக திருச்சி மாநகர காவல்துறை சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மலைக்கோட்டை சித்திரை திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து ஓம் நமசிவாய என்ற பக்தி கோஷத்துடன் தரிசனம் செய்து சென்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *