திருச்சி மாவட்டம் பச்சைமலை வண்ணாடு பகுதியில் உள்ள கோரையாறு அருவியில் குளிப்பதற்காக பெரம்பலூர் மாவட்டம் வடக்கு மாதேவி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (35) என்பவர்.
தனது நண்பர்கள் உடன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சுற்றுலா வந்துள்ளார். அப்பொழுது மணிகண்டன் கோரையாறு அருவியில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது சுழலில் சிக்கி மூச்சு திணறி உயிரிழந்ததாக தெரிகிறது.
அவரது உடலை தேடிய நண்பர்கள் கிடைக்காததால் துறையூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர் சென்றபோது மணிகண்டன் உடல் நீரில் மிதந்து கொண்டிருந்தது.
மணிகண்டனின் சடலத்தை கைப்பற்றிய தீயணைப்புத் துறை வீரர்கள் துறையூர் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். துறையூர் காவல்துறையினர் துறையூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக மணிகண்டனின் உடலை அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments