திருச்சி மாவட்டம், உத்தமர்சீலியில் அஞ்சலகம் மூலம் பொதுமக்கள் சேமித்த 25 லட்சத்துக்கும் மேலான பணத்தை கையாடல் செய்த ஊழியர்பொதுமக்கள் அஞ்சல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம். அஞ்சல் அலுவலர்கள் கம்பி நீட்டித்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
திருச்சி மாவட்டம், திருவளர்சோலை அருகே உள்ள உத்தமர்சீலியில் திருவானைக்கோவில் கிளை அஞ்சல் நிலையம் செயல்பட்டு வருகிறது.கடந்த 2013ம் வருடம் திருவானைக்கோவில் அருகே உள்ள ஜம்புலிங்கம் நகரை சேர்ந்த செந்தில்குமார் மனைவி லதா (40) என்பவர் ஊழியராக வேலைக்கு சேர்ந்து தற்போது கிளை அஞ்சலக ஊழியராக பணியாற்றி வருகிறார்.உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடு, பொன்னுரங்கபுரம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த அஞ்சல் நிலையத்தில் சேமிப்பு கணக்கு, மாதாந்திர சேமிப்பு திட்டம் போன்ற பல
திட்டங்களின் கீழ் பணம் சேமித்து வருகின்றனர்.பல வருடங்களாக ஒரே அஞ்சல் நிலையத்தில் பணியாற்றி வருவதால் கிராம மக்கள் அனைவருக்கும் நன்கு பரிட்சையமான அவர் கிராம மக்களின் பேரன்பையும், நம்பிக்கையும் பெற்றுள்ளார்.இந்நிலையில் பொதுமக்கள் தங்களது கணக்கில் பணத்தை வரவு வைக்கவும், சேமிக்கவும் கொடுக்கும் பணத்தை அஞ்சலக ஊழியர் லதா பெற்றுக்கொண்டு திருவானைக்கோவில் அலுவலகத்தில்தான் வரவு வைக்க முடியும் என கூறி வைத்துக்கொள்வாராம்.மேலும் பெரும்பாலானோர் சேமிப்பு கணக்கு புத்தகத்தை தானே பாதுகாப்பாக வைத்திருப்பதாக கூறி பணத்தையும் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஓய்வுபெற்ற மின்சார வாரிய ஊழியர் ஒருவர் தான் பிக்சடு டெப்பாசிட் செய்து 3 லட்சம் ரூபாய்யை எடுப்பதற்கு சென்றபோது கணக்கில் பணம் இல்லாததை அறிந்த அதிர்ச்சியடைந்துள்ளார்.இதுகுறித்து லதாவிடம் கேட்டபோது தான் பணத்தை எடுத்து செலவு செய்துவிட்டதாகவும் சில நாட்களில் திருப்பி தருவதாக அந்த நபரிடம் கூறியிருக்கிறார்.அதன்படி ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தை சம்பந்தப்பட்டவரிடம் லதா திருப்பி கொடுத்திருக்கிறார். மீதி பணத்தை கொடுக்காமல் அலைக்கழித்து வந்திருக்கிறார்.இந்த சம்பவம் அந்த பகுதியில் தீயாய் பரவியதை தொடர்ந்து கிராம மக்கள் அவரவர் சேமிப்பு கணக்கை ஆய்வு செய்வதற்காக அஞ்சல் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
அப்போது ஊழியர் லதா விடுமுறை என்பதை அறிந்த பொதுமக்கள் அஞ்சல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனையறிந்த திருவானைக்கோவில் அஞ்சல் நிலைய ஊழியர்கள் உத்தமர்சீலிக்கு புறப்பட்டு வந்து சேமிப்பு கணக்கு வைத்தவர்களிடம் விசாரணை நடத்தியபோது 25 லட்சம் ரூபாய்க்கு மேல் லதா கையாடல் செய்தது தெரியவந்தது. லதா தனிநபராக இந்த கையாடலை செய்திருப்பதால் அஞ்சல்துறை எவ்வித பொறுப்பும் ஏற்க முடியாது அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை மட்டுமே எடுக்க முடியும் என கூறியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுத்து இழந்த பணத்தை பெற்றுத்தர வலியுறுத்தி கல்லனை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன.இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சமரச பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments