திருச்சி பூங்குடியில் சரக்கு வாகனம் சாலை குறுக்கே சிக்கி 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு -சீர் செய்த பொதுமக்கள்திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மணிகண்டம் வழியாக திண்டுக்கல் செல்ல தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் பூங்குடி சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இதில் அதிக பாரம் ஏற்றி வரும் கனரக வாகனங்களும் சென்று வருகிறது.இன்று சென்னையிலிருந்து மதுரை செல்ல மகாராஷ்டிரா பதிவு என் கொண்ட 12 சக்கரம் பொருந்திய பெரிய கண்டெய்னர் கனரக லாரி ஒன்று கூகுள் மேப்பை பார்த்து ஓட்டுநர் ராம்ராஜ் என்பவர் ஓட்டி வந்துள்ளார், அந்த வாகனம் காலியான வாகனம் எனவும் அது டிராக்டர் எடுத்துச் செல்ல பயன்படுத்தும் கனரக லாரி என கூறப்படுகிறது.
இந்நிலையில் மாலை பூங்குடி ரயில்வே கேட்டில் அந்த வாகனம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் அந்த கனரக வாகனம் பின்பக்கம் வந்து திருப்பியபோது எதிர்பாராதமாக சாலையின் இரு திட்டுகளில் சிக்கி நின்றது.இதனால் லாரிக்கு முன்னும் பின்னும் வந்த வாகனங்கள் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வந்த வழியில் திரும்பி சென்றது.
உடனடியாக ஓட்டுநர் செய்வதறியாது தவித்து உள்ளார். மேலும் அவர் ஹிந்தி பேசியதால் அந்த பகுதி மக்களுக்கு ஒன்றும் புரியவில்லை.ஒரு கட்டத்தில் இந்தி பேசியவர்கள் உதவியோடு அந்தப் பகுதி மக்கள் உடனடியாக ஜேசிபி இயந்திரத்தை கொண்டு சுமார் மூன்று மணி நேரம் போராடி கனரக லாரியை மீட்டு கொடுத்தனர்.
தொடர்ந்து பூங்குடி சாலையில் இதுபோன்று கனரா வாகனங்கள் அதிகமாக வருவதாகவும், மேலும் ரயில்வே மின்சாரக் கம்பி மற்றும் உயிர் அழுத்த மின்கம்பத்தில் உரசியவாறு செல்கின்றது எனவும், இதனை தடுக்க தேசிய நெடுஞ்சாலையில் அறிவிப்பு பலகை வேண்டும் என்பது அந்தப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
மூன்று மணி நேரம் சம்பவத்தில் காவல்துறை யாரும் உதவிக்கு வரவில்லை என்பதும், உயர் அழுத்த மின்சார கம்பியில் உரசாமல் பொதுமக்களே ஒன்று சேர்ந்து இந்த லாரியை மீட்டுக் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments