அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள குழவடையான் கிராமத்தில் உள்ள (தனியார் மெட்ரிக்) கோகிலாம்பாள் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவி சோபியா 500க்கு 499 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார்.
தஞ்சை மாவட்டம் குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் வெங்கடேசன் மகள் சோபியா தற்பொழுது வெளியாகி உள்ள பொது தேர்வில் தமிழில் 99 மதிப்பெண்களும் ஆங்கிலம் அறிவியல் கணக்கு சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார்.
மேலும் தான் நீட் தேர்வு எழுதி மருத்துவ படிப்பு பயில வேண்டும் என்பதை இலக்காக கொண்டுள்ளார்.499 மதிப்பெண் எடுத்த மாணவியை பெற்றோர்கள் சக மாணவர்கள் ஆசிரியர்கள் பள்ளி தாளாளர் என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments