திருவெறும்பூர் அருகே உள்ள என் ஐ டி கல்லூரியில் இறுதி ஆண்டு படித்த ராஜஸ்தானை சேர்ந்த மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கருவொலி டிக் கோழி காளான் பகுதியைச் சேர்ந்தவர் நரபட்லால் மீனா இவரது மகன் குல்திப்மீனா (21) இவர் திருவெறும்பூர் அருகே உள்ள என் ஐ டி கல்லூரிகளில் உள்ள விடுதியில் தங்கி பி டெக் இறுதி ஆண்டு படித்து தேர்வு எழுதியுள்ளதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் குல்தீப் மீனாதனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு கிராம நிர்வாக அலுவலர் ராஜகுருவிற்கு தகவல் கிடைத்துள்ளது.அதன் அடிப்படையில் ராஜகுரு இச்சம்பவம் குறித்து துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார் அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற துவாக்குடி போலீசார் குல்தி மீனாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பறிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து துவாக்குடி போலீசார் விசாரணை செய்தபொழுது குல்தீப் மீனாதேர்வில் அரியர் வைத்துள்ளதாகவும் இறுதி ஆண்டு முடிந்த நிலையில் ஆரியர் இல்லாமல் தேர்ச்சி பெற முடியுமா என்று சந்தேகத்தில் இருந்ததாகவும்இந்த நிலையில் அவருடன் இருந்த மாணவர்கள் அனைவரும் வீடு திரும்பி விட்டதாகவும் மீனா மட்டும் சொந்த ஊருக்கு நாளை செல்வதாக இருந்ததாகவும் இந்நிலையில் குல்தீப் மீனா அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதும் தெரியவந்தது.
மேலும் குறித்து மீனா இறப்பிற்கு காரணம் காதல் தோல்வியா? வேறு ஏதேனும் பிரச்சனையால் குல்தீப் மீனா தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.என்ஐடி கல்லூரி விடுதிக்குள் மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் என் ஐடி கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
        
                                            
                            13 Jun, 2025                          
390                          
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
        
 18 May, 2025
            




			

          
                          
            
            
            
            
            
            
            
            
            
            
                          
                          
                          
                          
                          
                          
                          
Comments