திருச்சி மாவட்ட சிலம்பாட்ட கலகம் சார்பில் உறையூர் சேசா ஐயங்கார் நினைவு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் சிலம்பம் சேம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.மாவட்ட தலைவர் பூர்ண புஸ்கலா தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியில் துணைத்தலைவர் சக்திவேல், சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக சிவசேனா மாநில செயல் தலைவர் சிவக்குமார் கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.3 வயது முதல் 27 வயது வரை உள்ள சிலம்பாட்ட வீரர்களுக்கு நடைபெற்ற இந்த போட்டியில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த முசிறி, மணப்பாறை, சமயபுரம், திருவெறும்பூர், தொட்டியம், துறையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த எழுநூறுக்கும் மேற்பட்ட சிலம்பாட்ட வீரர்கள் கலந்துகொண்டனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற வீர வீராங்கனைகளுக்கு திருச்சி சிலம்பாட்ட கழகம் சார்பில் பதக்கம், சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.மாவட்ட அளவில் முதல் இடத்தை பிடித்து வெற்றி பெற்ற வீரர்கள் அடுத்து மாநில அளவில் நடக்க உள்ள சிலம்ப போட்டியில் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

விழாவில் முன்னதாக திருச்சி சிலம்பாட்ட கழக மாவட்ட செயலாளர் செந்தில் குமார் வரவேற்று பேசினார். இறுதியில் பொருளாளர் ஹரிகுமார், தலைமை போட்டி இயக்குனர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினர்.விழாவில் மாவட்ட மற்றும் கிளை செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
13 Jun, 2025
389
24 May, 2025







Comments