திருச்சி மாவட்டம் கருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்றவர் மாணவி பி.சத்யபிரியா. பொதுத்தேர்வு காலகட்டத்தில் தன்னுடைய தந்தை மறைவெய்திய நிலையிலும் மனஉறுதியோடு தேர்வினை எதிர்கொண்டு 528 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
அதேபோல திருவெறும்பூர் – தேனேரிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் 11ஆம் வகுப்பு மாணவி ஷாலினியும் பொதுத்தேர்வு நேரத்தில் தனது தந்தையை இழந்த நிலையிலும் கல்வியின் அவசியத்தை உணர்ந்து தவறாமல் தேர்வெழுதி சிறப்பான முறையில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
அந்த தங்கைகளை ஊக்குவிக்கும் வகையில் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று திருச்சியில் இருவரையும் நேரில் பாராட்டி, கல்விக்கான நிதியுதவியை வழங்கினார்.உடன் இந்நிகழ்வில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு பள்ளிக்கல்வித் துறை
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா ஆகியோர் உடன் இருந்தனர்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments