டெல்லியில் கடந்த 80 நாட்களுக்கும் மேலாக 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்த விவசாய சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும், ரயில்வே துறை, எல்ஐசி, விமான நிலையங்கள், அரசு வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரியும், படித்த இளைஞர்களுக்கு வேலையை ஏற்படுத்த தவறினர் .மத்திய அரசை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட தலைவர் ஜவஹர் தலைமையில் கேஸ் சிலிண்டர் உடன் திருச்சி அருணாச்சலம் மன்றத்தில் இருந்து பேரணியாக நடந்து சென்று மெயின்கார்டு கேட் முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 60க்கும் மேற்பட்டவர்களை கோட்டை காவல் நிலைய உதவி ஆணையர் ரவி அபிராம் மற்றும் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
Comments