விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி ஜங்சன் SBI தலைமை அலுவலகம் பூட்டி போராட்டம்
விவசாயிகளுக்கு வழங்கிய RBI உத்தரவு-வை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு சங்க வங்கிகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும், பிணைய (நகை) கடன்களுக்கு வழங்கப்படும் ரசீது கொண்டுவந்தால் தான் நகையை திருப்ப முடியும், இல்லாவிட்டால் திருப்பி கொடுக்க இயலாது என்று வங்கிகள் கூறுவதை நிறுத்த வேண்டும், நகைகள்
திருப்ப விவசாயிகள் வந்தால் அதனை உடனடியாக திருப்பி வங்கிகள் வழங்க வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் திரு. P. அய்யாக்கண்ணு BABL அவர்களின்
தலைமையில் விவசாயிகள் 26.05.2025 திங்கள்கிழமை இன்று காலை 10.30 மணிக்கு திருச்சி ஜங்சனில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி தலைமை அலுவலக நுழை வாயில் கேட்டை பூட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments