Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க விழிப்புணர்வு பிரச்சாரம் 

துறையூர் பேருந்து நிலையம் முன்பாக உள்ள சின்ன ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க சமூக ஆர்வலர்கள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் ஐக்கிய அணி சார்பாக விழிப்புணர்வு பிரச்சாரம் 

திருச்சி மாவட்டம், துறையூர் பேருந்து நிலையம் எதிரில் 33 ஏக்கர் பரப்பளவில் உள்ள சின்ன ஏரி அமைந்துள்ளது இது 3.8 மில்லியன் காண அடி நீரை கொள்ளளவை கொண்டது 3.8 மில்லியன் கன அடி நீரை கொள்ளளவு கொண்ட ஏரியானது இப்பகுதியில் 77 ஹெக்டர் பரப்பளவு விவசாய நிலங்களுக்கு

பாசன வசதி தெரிகிறது மேலும் இந்த மழைக்காலங்களில் இந்த ஏரியில் இருந்து வெளியேறும் நீரானது அம்மாபட்டி சிங்களாந்தபுரம் தெற்கு ஊர் காளியாம்பட்டி ஆதனூர் திருத்தலையூர் வழியாக காவிரியில் சென்று கலைக்கிறது.தற்போது துறையூர் நகரம் விரிவாக்கம் அடைந்ததால் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் கழிவுநீர்கள் இந்த ஏரியில்கலந்து தண்ணீர் அமிலத்தன்மை அடைந்துள்ளது.

 இதனால் துர்நாற்றம் வீசி வருகிறது மேலும் சுற்றி வட்டாரப் பகுதி உள்ள நிலத்தடி நீர்கள் அமிலத்தன்மை கொண்டதாக மாறியதால் அருகில் உள்ள விவசாய நிலங்கள் பாதிப்பு அடைவதோடு விவசாய நிலங்களில் விவசாயிகள் வேலை செய்வதால் அவர்களுக்கு தோல் சம்பந்தப்பட்ட பல்வேறு தொற்று நோய்கள் பரவுவதாகவும், தொடர்ந்து சுற்று வட்டார பகுதி மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் துர்நாற்றம் வீசி தொற்றுநோய்

பரவுவதாகும் குற்றம் சாட்டி சமூக ஆர்வலர்கள் சின்ன ஏரி நீரை அப்புறப்படுத்தி, தூர்வாரி மழைநீர் தேங்கி வைக்கவும் கழிவுநீர் ஏரியில் கலக்காத வண்ணம் பாதாள சாக்கடை அமைத்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பகளவாடி ஆனந்த், சுப்பிரமணி, அங்கமுத்து உள்ளிட்டோர் தலைமையில் சுமார் 20க்கும் மேற்பட்டோர்கள் சிங்களாந்தபுரம், தெற்க்கியூர், காளியாம்பட்டி, ஆதனூர், திருத்தலையூர் உள்ளிட்ட சுற்று வட்டார

 பகுதியில் உள்ள சுமார் பத்திற்கு மேற்பட்ட கிராமங்களிலுள்ள பொதுமக்கள் இடையே விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர், இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் ஐக்கிய முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *