அரியலூர் – அடுக்கு மாடி குடியிருப்பில் பெண் கொலை? – உடல் அழுகிய நிலையில் உள்ளதால் கொலையா? இயற்கை மரணமா? என்று தெரியவில்லை தற்போது சந்தேக மரணம் என போலீசார் விசாரணை
அரியலூர் நகரில் உள்ள அரசு கலைக்கல்லூரி சாலையில் அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியில் இரண்டாவது தளத்தில் குடியிருப்பில் வசித்தவர் பாப்பா வயது 44 இந்நிலையில் இன்று காலையில் பழைய துணி வாங்க வந்த பெண் ஒருவர் அவரது வீட்டிற்க்கு சென்று பார்த்த போது அதிர்ச்சியடைந்தார்.
உடல் அழுகிய நிலையில் தரையில் கிடந்ததை பார்த்த அவர் அரியலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.போலீசார் விசாரணை மேற்கொண்ட போது வீட்டின் கதவு திறந்துள்ளது அவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் தரையில் பிணமாக கிடப்பதை பார்த்தால் யாரோ அடித்து கொலை செய்து போல் உள்ளது.
ஆனால் அழுகிய நிலையில் உடல் உள்ளதால் பிரேத பரிசோதனை பிறகு தான் கூற முடியும் நிலை உள்ளது.இது குறித்து போலீசார் விசாரணைமேற்கொண்டுள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments