தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் “உழவரைத் தேடி வேளாண்மை- உழவர் நலத்துறை” திட்ட துவக்க விழா திருவெறும்பூர் அருகே உள்ள வழவந்தான் கோட்டையில் நடந்தது.
திருவெறும்பூர் வட்டாரம், வாழவந்தன்கோட்டை கிராமத்தில் வேளாண்மை துறை மூலம் “உழவரைத் தேடி வேளாண்மை- உழவர் நலத்துறை” திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைப்பது காணொளி காட்சி மூலம் விவசாயிகளுக்கு காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குனர் சுகன்யா தேவி முன்னிலை வகித்து திட்டத்தின் முக்கிய அம்சங்களை எடுத்துக் கூறினார்.அதில் கூறியதாவது வேளாண்மை விரிவாக்க சேவைகள் உழவர்களுக்கு அவர்களுடைய கிராமத்திற்குச் சென்று வழங்கப்பட உள்ளது.
மேலும் அரசு நலத்திட்டங்கள் வெகு விரைவாக உழவர்களை சென்றடைய 15 க்கு நாட்களுக்கு ஒருமுறை (2 வது மற்றும் 4 வது வெள்ளிக்கிழமைகளில்) வட்டாரங்களில் உள்ள இரண்டு கிராமங்களில் நடத்தப்படும் எனவும் அட்மா திட்ட செயல்பாடுகள், விவசாயிகளுக்கு தனி அடையாள எண் வழங்குதல், முதலமைச்சரின் மன்னுயிர் காத்து மன்னுயிர் காப்போம் போன்ற துறை சார்ந்த திட்டங்கள் பற்றி எடுத்துக் கூறினார்..
இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். விதை ஆய்வாளர் மோகன்தாஸ் கலந்துகொண்டு விவசாயிகள் சான்று பெற்ற விதைகள் பயன்படுத்துமாறும் விதை உரிமம் பெற்ற விற்பனையாளர்களிடமே விதை வாங்க வேண்டும் எனவும் பருவத்திற்கேற்ற விதைகளை பயன்படுத்துமாறும் தனியார் கடைகளில் விதை சம்பந்தமாக ஏதேனும் குறை இருப்பின் தங்களிடம் தெரிவிக்குமாறு எடுத்துரைத்தார்.
பட்டு வளர்ச்சி துறை இளநிலை ஆய்வாளர் காயத்ரி கலந்துகொண்டு துறை சார்ந்த திட்டம் மற்றும் மானிய திட்டங்கள் பற்றி எடுத்துக் கூறினார்.கால்நடை மருத்துவர் பிரசன்னா அவர்கள் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் குறித்தும் அதன் மேலாண்மை மற்றும் தடுப்பு முறைகள் பற்றி எடுத்துக் கூறினார்.தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் கலந்துகொண்டு பயிர் கடன் பெரும் முறைகளைப் பற்றி எடுத்துக் கூறினார்.
வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை அலுவலர் எபிநேசன் வேளாண்மை சந்தைப்படுத்துதல் வேளாண் வணிகத் துறையின் கீழ் உட்கட்டமைப்பு மற்றும் திறம்பட மேம்படுத்துதல் பற்றி எடுத்துக் கூறினார்.உதவி விதை அலுவலர் சுதாகர் விதை உற்பத்தி மற்றும் விதைப்பண்ணை அமைக்கும் முறைகளையும் உதவி வேளாண்மை அலுவலர் ஹேமா உழவன்
செயலி, மண் மாதிரி எடுக்கும் முறைகள், பிரதம மந்திரியின் கவுரவ நிதி திட்டம் பற்றி எடுத்துக் கூறினார்.இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.வேளாண்மை அலுவலர் செல்வ லட்சுமி விவசாயிகளுக்கு நன்றி கூறினார் .
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments