வேளாண் பணிகள் தொழிலாளர் பற்றாக் குறைவினால் தவறாமல் குறித்த நேரத்தில் நடைபெற குறைந்த செலவில் அதிக மகசூல் பெறுவதில் வேளாண் கருவிகள் மதிப்பு கூட்டு இயந்திரங்கள் சூரிய கூடார உணர்த்திகள் போன்றவை உழவர்கள் பயனடையும் வகையில் வேளாண்மை பொறியியல் துறையால் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டு வருகின்றன.
வேளாண் இயந்திரங்களை பயன்படுத்தும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மை பொறியியல் துறையால் வேளாண் இயந்திர உற்பத்தி நிறுவனங்களுடன் இணைந்து வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு குறித்த முகாமை உங்களை நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இன்று (30. 05.2025 )திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஆட்சியராக வளாகத்தில்
வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்து. இம்முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் மா பிரதீப் குமார் அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
வேளாண் இயந்திர உற்பத்தி நிறுவனங்கள் அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள் மூலம் இயக்குதல் பராமரித்தல்,செய்யக்கூடியது மற்றும் செய்யக்கூடாதது மகசூல் எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்கள் பயன்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.அந்தந்த நிறுவனங்கள் மூலம் சிறப்பு சலுகைகள் சில சேவைகளும் வழங்கப்பட்டது.
இந்த முகாமில் திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள், வேளாண்மை கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர். இயந்திர உற்பத்தி நிறுவனங்கள் புதிய நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி,வேளாண்மை துறை இயக்குனர் பூ.வசந்தா, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் ஜெயராணி, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் கந்தசாமி, துணை இயக்குனர் சரண்யா, அரசு அலுவலர்கள் விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாய பெருங்குடி மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments