திருச்சி மாவட்டம் துறையூர் பகுதிகளில் சில மாதங்களாக செல்போன் காணாமல் போவதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதனை அடுத்து துறையூர் காவல் ஆய்வாளர் முத்தையா
தனிப்படை அமைத்து சைபர் கிரைம் காவலர் உதவியுடன் விசாரணை செய்ததில் பல்வேறு பகுதிகளில் காணாமல் போன செல்போன்கள் இருப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து முதல் கட்டமாக 25 செல்போன்களை மீட்டனர்,இன்று துறையூர் காவல் ஆய்வாளர் முத்தையா செல்போன் தவறவிட்ட
உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். இதன் மதிப்பு சுமார் 5 லட்சம் என தெரிகிறது இந்நிகழ்ச்சியில் காவல் உதவி ஆய்வாளர் சஞ்சீவி, தமிழ்ச்செல்வன் ரவிச்சந்திரன் மற்றும் காவலர்கள் தங்கதுரை, குகன், ராஜா யோகராஜ், மற்றும் காவல் வரவேற்பாளர் கவிதா ஆகியோர் உடன் இருந்தனர்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments