திருவெறும்பூர் அருகே பாண்டிச்சேரி அரசு மதுபான பாட்டில்களை கடத்தி வந்த வாலிபரை திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் போலீசார் கைது செய்தனர்.
திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் நேற்று திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் காட்டூர் மஞ்சத்தில் பாலம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபொழுது இரு சக்கர வாகனத்தில் சந்தேகப்படும்படியாக வந்த வாலிபரை மரித்து சோதனை செய்த பொழுது அவர் பையில் பாண்டிச்சேரி மதுபான பாட்டுகள் இருப்பது தெரியவந்தது.
அதன் அடிப்படையில் அவனை பிடித்து விசாரித்த பொழுது அவன் திருச்சி முத்தரசநல்லூர் பழூர் காந்திநகரை சேர்ந்த அஸ்வின் குமார் (19) என்பதும் அவன் காரைக்காலில் பாண்டிச்சேரி அரசு மதுபான பாட்டில்களை வாங்கிக்கொண்டு ரயிலில் வந்து திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் இறங்கியதாகவும் பின்னர் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு எடுத்துச் சென்ற பொழுது தான் வாகன தனிக்கையில் சிக்கியதாக கூறியுள்ளான்
மேலும் அவனிடம் இருந்து 750 எம்எல் கொண்ட 22 மதுபான பாட்டிகள், 375 எம்எல் கொண்ட 7 மதுபான பாட்டில்கள், 180 எம்எல் கொண்ட 13 மதுபான பாட்டில்களும். 90 எம்எல் கொண்ட இரண்டு மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து அஸ்வின் குமாரை கைது செய்து திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிபதி உத்தரவின் பேரில் அஸ்வின் குமாரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments