பழனிக்கு சாமி கும்பிடு சென்றவர் திரும்பி வந்த போது வீட்டில் நான்கு திருடர்கள் தப்பி ஓடிய சம்பவம் – 24 மணி நேரத்தில் நான்கு பேரையும் கைது – 21 பவுன், வெள்ளி பொருட்கள் பறிமுதல்
திருச்சி பீமநகர் கூனி பஜாரை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது29). இவர் அரியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 29ந்தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் பழனி முருகன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றார். சாமி தரிசனம் முடித்து விட்டு நேற்று இரவு வீட்டிற்கு வந்தார்.
வீட்டின் உள்பக்கமாக பூட்டு போடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.மேலும் வீட்டிற்குள் ஆள் சத்தமும் கேட்டதால் அவர் உடனே வெளிக்கதவில் வேறு ஒரு பூட்டை போட்டு பூட்டிவிட்டு போலீஸ் காவல் கட்டுப்பாட்டு அறையான 100க்கு தகவல் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து போலீசார் உடனடியாக அங்கு வந்தனர். பக்கத்து வீடுகளில் வசிப்பவர்களும் ராஜசேகரின் வீட்டு முன் திரண்டனர். பொதுமக்கள் உதவியுடன் போலீசார் வீட்டிற்குள் சென்று கொள்ளையர்களை பிடிக்க முயன்றபோது ஒருவர் மட்டும் சிக்கினார். மற்ற 3 பேர் சுவர் ஏறி குதித்து ஓடினார்கள். பின்னர் ராகுல் ,சதீஷ், நவநீதகிருஷ்ணன், வெற்றிச்செல்வம்
4 பேரையும் விரட்டி சென்று பிடித்தனர்.பாலக்கரை காவல் ஆய்வாளர் பேசில் பிரேம் ஆனந்த் தனிப்படை காவலர்கள் விஜயகுமார், அஜ்மல்கான், அருண்குமார், ஜெகதீசன், கோபிக்கண்ணன் , செல்வம், வினித்ராம் போலீசார் நடத்திய விசாரணையில் ராஜசேகர் வீட்டில் 21பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளி
பொருட்களை திருடிய 4 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து திருட்டு நகை, வெள்ளிப்பொருட்களை பறிமுதல் செய்தனர். 24 மணி நேரத்தில் நகைகளை கொள்ளையடித்த நான்கு பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments