Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

டாக்டர் நிவ்யா-வின் அதி நவீன பல் மருத்துவக் குழுமத்திற்கு “Icons of Healthcare” – விருது

டாக்டர் நிவ்யா-வின் அதி நவீன பல் மருத்துவக்குழுமம் பல் மருத்துவத்தில் கடந்த பதினோரு ஆண்டுகளுக்கும் மேலான அசைக்க முடியாத சேவைக்காகவும் உலகின் அதி நவீன தொழில்நுட்பங்களையும் கருவிகளையும் பயன்படுத்தி மக்களுக்கு

அளித்துவரும் மிகச்சிறந்த சிகிச்சை முறைகளுக்காகவும் Times of India குழுமத்தின் மிக உயரிய விருதான “Icons of Healthcare – திருச்சி மற்றும் தஞ்சாவூர் சார்ந்த டெல்டா மாவட்டங்கள் “ என்ற விருதினை தமிழ்நாட்டின் நகராட்சி நிர்வாக அமைச்சர் மாண்புமிகு K N நேரு அவர்களிடமிருந்து பெற்றது..

 டாக்டர் நிவ்யா-வின் அதி நவீன பல் மருத்துவக்குழுமம் கடந்த பதினோரு ஆண்டுகளில் இருபத்தி ஏழாயிரம் மக்களின் புன்னகையை மேம்படுத்திய சாதனையை அடைந்துள்ளது. மேலும் பல இடங்களில் புதிய கிளைகளின் மூலம் மக்களுக்கு அதி நவீன தரமான பல் மருத்துவ சிகிச்சையை வழங்க உறுதி அளிக்கிறது. 

டாக்டர் நிவ்யா-வின் அதி நவீன பல் மருத்துவக்குழுமம் தற்போது திருச்சியின் மிக முக்கிய இடங்களான காட்டூர் , கண்டோன்மெண்ட் மற்றும் KK நகர் என மூன்று இடங்களில் இயங்கி வருகிறது. மேலும் வெகு விரைவில் தில்லை நகரில் தனது நான்காவது கிளையை தொடங்க உள்ளது.காவேரி டெல்டா மாவட்டங்களின் முதல் மற்றும் ஒரே “INVISALIGN PLATINUM PROVIDER ” என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் அதிசிறந்த 1 % பல் மருத்துவ

குழுமங்களில் ஒன்றான சாதனையையும் அடைந்துள்ளது. இங்கு அதிக வயதானவர்களுக்கும் அதிக இரத்த அழுத்த பிரச்சினை உள்ளவர்களுக்கும் இரத்த இழப்பு சிறிதும் இன்றி அதி நவீன லேசர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெகு விரைவில் காயம் ஆறக்கூடிய அறுவை சிகிச்சைகள் வெகு காலமாக செய்யப்பட்டு வருகின்றது.மேலும் பதட்டம் அதிகம் உள்ள குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் “Conscious Sedation – Laughing gas Therapy” சிகிச்சை முறையை பயன்படுத்தி பதட்டத்தை முழுவதுமாக போக்கி பல் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.அதி நவீன நுண்ணோக்கியை பயன்படுத்துவதன் மூலம் அனைத்து பல் மருத்துவ சிகிச்சைகளின் தரமும் மேம்படுத்த படுகிறது.

அனைத்து பல் வேர் சிகிச்சைகளும் ENDOMOTOR மற்றும் APEX LOCATOR போன்ற அதி நவீன டிஜிட்டல் தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்தி சிறிதும் பிழையின்றி நிறைவு செய்யப்படுவதால் வாழ்நாள் முழுவதும் வலியின்றி நிம்மதியாக உணவு உட்கொள்ள முடியும்.ஒவ்வொரு பல் மருத்துவ ஆலோசனைக்கும் உலகின் மிகச்சிறந்த பல் மருத்துவ இயந்திர மனிதன் (DENTAL ROBOTS ) மற்றும் அதி நவீன நுண்துளை கேமரா (Intra oral Camera) பயன்படுத்துவதன் மூலம் அனைத்து பல் சார்ந்த பிரச்சினைகளுக்கும் மிக விரைவில் துல்லியமாக சிகிச்சை அளிக்க முடியும்.

முழுமையான வாய் நலன் பரிசோதனைக்கு தேவையான Orthopantomogram (OPG) இயந்திரமும் இங்கேயே உள்ளதால் ஆய்வக பரிசோதனைக்காக வேறு எங்கும் அலைய வேண்டிய அவசியம் ஏற்படாது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *