Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஸ்

தமிழக முதல்வர் கடந்த மாதம் 9ம் தேதி திருச்சி மாவட்டத்தில் நடந்த பல்வேறு நலத்திட்ட பணிகள் தொடக்க விழாவில் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 54,000 ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக ஏழை எளிய மக்கள் குடியிருக்கும் வீட்டிற்கான பட்டா வழங்க வேண்டும் என்பதே தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் திராவிடர் மாடல் ஆட்சியின் லட்சியம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 2006 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கிசிறப்புரையாற்றினார் .

            நடந்த விழாவில் 23 திருநங்கைகள் உட்பட 2006 பேருக்கு இலவச வீட்டு மனைகளை வழங்க  திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகம் மற்றும் திருவெறும்பூர் ஒன்றிய அலுவலகம் துவாக்குடி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. 

  இவ்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் மண்டலம் மூன்றின் தலைவர்மு. மதிவாணன் துவாக்குடி நகர மன்ற தலைவர் காயம்பு ஒன்றிய கழகச் செயலாளர்கள் கங்காதரன் கருணாநிதி பேரூர் கழகச் செயலாளர் தங்கவேலு பகுதி கழகச் செயலாளர் நீலமேகம் தர்மராஜ் விஜயகுமார் சிவக்குமார் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் திருச்சி 

டி ஆர் ஓ ராஜலட்சுமி, ஆர்டிஓ அருள், திருவெறும்பூர் தாசில்தார் செயபிரகாசம் செயற்பொறியாளர் ஜெகஜீவன் ராமன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இலவச வீட்டு மனை பட்டாக்களை தமிழக பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ பொய்யாமொழி வழங்கி பேசியதாவது தமிழக மக்களை பெரிதும் நேசிக்கும் கலைஞரின் 102 வது பிறந்தநாள் விழாவில் திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட சுமார் 2000 த்திற்கும் மேற்பட்டோருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்குவது அவருக்கு புகழ் சேர்ப்பதாகும்.  கையளவு நிலம் இருந்தாலும் அது சொந்த நிலமாக இருக்க வேண்டும் என எல்லோரும் நினைப்பார்கள் தற்பொழுது

வீட்டுமனை பட்டா வழங்கியவர்களில் தகுதியானவர்களை கண்டறிந்து கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் அவர்களுக்கு வீடு கட்டி தரப்படும் என்றும் மேலும் நீதிமன்ற குறுக்கீடு உள்ளிட்ட காரணங்களால் வீட்டுமனை பட்டா வழங்க முடியாதவர்களை நாங்கள் கைவிட மாட்டோம் என்றும் உங்களை பாதுகாப்போம் உங்கள் ஆனந்தத்தோடு தற்பொழுது நானும் ஆனந்தமாக கலந்து கொள்கிறேன் என்றார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *