திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி கிராமத்தில் அமைந்துள்ள பாலாம்பிகா சமேத மாற்றுரைவரதீஸ்வரர் கோவில் வைகாசி தேர் திருவிழா கடந்த மே 31- ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனை முன்னிட்டு அனுதினமும் மாற்றுரைவரதீஸ்வரர் பூத வாகனம், சேஷ வாகனம், யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.இதன் தொடர்ச்சியாக திருத்தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
காலை 8 மணிக்கு மாற்றுரைவரதீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூ அலங்காரத்தில் புறப்பாடு கண்ட மாற்றுரைவரதீஸ்வரர் திருத்தேர் தட்டில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.இதனையடுத்து ஓம்..சிவாயா.. நம் சிவாயா…என விண்ணதிரும் பக்தி கோஷங்கள் முழங்க ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பார்வதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments