இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறை இன்று
09.06.2025 மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் அவர்கள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் முன்னிலையில் திறந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு கிடங்கில்16076 எண்ணிக்கை உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வின் போது திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் அருண் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் நேர்முக உதவியாளர ராஜசேகர் தேர்தல் தனி வட்டாட்சியர் செல்வகணேஷ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் ஆகியோர் உடன் இருந்தனர்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments