திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் துவாக்குடி மற்றும் பிஹெச்எல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பொது மக்கள் அமைதிக்கு கேடு விளைவிக்கும் வகையிலும் பொதுமக்களை அச்சுறுத்தியும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த துவாக்குடி அண்ணா வளைவு அம்பேத்கர் நகரை சேர்ந்த ஹரிஹரன் என்பவர் மீது கடந்த
(25. 05.2025)ஆம் தேதி கத்தியை காட்டி வழிப்பறி செய்த குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். குற்ற வழக்கில் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ. செல்வரத்தினம் அவர்கள் பரிந்துரையின் பெயரில் திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களால் தடுப்புக்காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு இன்று 10. 06.2025 ஆம் தேதி சிறையில் உள்ள குற்றவாளியின் மீது சார்வு செய்யப்பட்டது.
தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளியின் மீது திருவெறும்பூர் துவாக்குடி மற்றும் பிஹெச்எல் காவல் நிலையத்தில் குற்ற வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.திருச்சி மாவட்டத்தில் ஜனவரி 2025 முதல் தற்போது வரை 40 தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments